காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
விமானங்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் நெகிழியிலான குவளைகளுக்கும் கிண்ணங்களுக்கும் பதிலாகக் காகிதத்தால் செய்யப்பட்டவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான திரு. அஷ்வானி லோஹனி கூறினார்.
எரிபொருள் விநியோகப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அண்மையில் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒரு முக்கிய இலக்கு என வலியுறுத்தினார்.

