மற்றொருவரின் தொலைந்த கடன் அட்டையைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்த சந்தேகத்தின்பேரில் 54 வயது பெண் ஒருவர் நேற்று (29 ஆகஸ்ட்) கைது செய்யப்பட்டார்.
$700 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 30) தெரிவித்துள்ளனர்.
தொலைந்த கடன் அட்டையில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகக் காவல்துறையினருக்கு மார்ச் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது.
இன்று அந்தப் பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார். அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

