செமாக்காவ் குப்பை நிரப்புமிடத்தில் 30% கழிவைக் குறைக்க சிங்கப்பூர் திட்டம்

செமாக்காவ் குப்பை நிரப்புமிடத்திற்கு அனுப்பப்படும் கழிவின் அளவை 2030ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு குறைக்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது.

சிங்கப்பூரின் முதல் கழிவற்ற பெருந்திட்டத்தின்கீழ் அந்த முயற்சி எடுக்கப்படும்.

அங்கு கொட்டப்படும் கழிவின் அளவைக் குறைக்க முடிந்தால், குப்பை நிரப்புமிடத்தை 2035ஆம் ஆண்டுக்குப் பிறகும் பயன்படுத்த இயலும் என்று சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கழிவின் அளவைக் குறைப்பது அத்தியாவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

செமாக்காவ் குப்பை நிரப்புமிடம் 2045ஆம் ஆண்டு வரை செயல்படும் என்று முன்னதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு கொட்டப்படும் கழிவின் அளவு அதிகரித்துள்ளதால் 2035ஆம் ஆண்டு வரை மட்டுமே அது பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நாள் ஒன்றுக்கு 2,100 டன் கழிவு அங்கு அனுப்பப்படுகிறது. அதில் சாம்பல் மட்டும் 1,500 டன் எடை கொண்டது.

கடந்த 40 ஆண்டுகளில் சிங்கப்பூரில் கழிவின் அளவு ஏழு மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு கூறுகிறது.

செமாக்காவ் தீவில் உள்ள குப்பை நிரப்புமிடம் முழுவதும் கடற்பரப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் குப்பை நிரப்புமிடம் எனக் கூறப்படுகிறது.

1999ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அந்த இடத்தில், 2035ஆம் ஆண்டுக்குள் போதிய இடமின்றிப் போகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உணவுக் கழிவும் பொட்டலக் கழிவும் பெரிதளவில் குவிகின்றன. ஆனால், அவை மறுசுழற்சி செய்யப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது. மின்

கழிவை மறுசுழற்சி செய்வதும் முக்கியம்.

நச்சுத்தன்மை உடைய பொருட்கள் குப்பை நிரப்புமிடத்தில் கொட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய ஏற்கெனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வளங்கள் இருப்பதை உறுதிசெய்ய சிங்கப்பூரர்கள் அனைவரும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்று டாக்டர் கோர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!