முன்னோடிகளைக் கௌரவிக்க சிலைகள் திறந்து வைப்பு

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரிதும் ஆராயப்படாத காட்டுப்பகுதியாக சிங்கப்பூர் இருந்தது. துணிச்சல்மிக்க இரு ஆய்வாளர்களான பிரிட்டனைச் சேர்ந்த ஆல்ஃபிரெட் ரசல் வாலஸும் அவரது திடல் ஆய்வு உதவியாளர் அலியும் காட்டுப் பகுதியை ஆராய்ந்தனர்.

சிங்கப்பூரையும் மலாய் தீவுக்கூட்டத்தையும் ஆராயும் வேளையில் அவர்கள் மாதிரிப் பொருட்களை (specimen) சேகரித்தனர். நவீனகால விஞ்ஞானிகள் சிங்கப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள இயற்கை மரபுடைமையை பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு அந்த மாதிரிப் பொருட்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்த இரு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் நேற்று கௌரவிக்கப்பட்டன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் இயற்கை வரலாறு அரும்பொருளகத்தில் அவர்களது உருவச் சிலைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“நவீன சிங்கப்பூரின் 200 ஆண்டுகால நிறைவை மட்டும் நாம் குறிக்கவில்லை. நாட்டின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள 700 ஆண்டுகள் வரை பின்னோக்கிப் பார்க்கிறோம்.

“சிங்கப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியின் இயற்கை வரலாற்றையும் உயிரியல் பன்முகத்தன்மையையும் பற்றி தெரிந்துகொள்ள உதவும் வகையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்

படுத்தியதன் மூலம் ஆல்ஃபிரெட் ரசல் வாலஸும் அலியும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தனர்,” என்று திரு டியோ தெரி வித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!