கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன

கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன

1 mins read
42f8bd28-72ba-452c-8c0b-3b4c48e7aa20
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சிகரெட்டுகள். படம்: குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையம் -

மெத்தைகளில் மறைத்து கிட்டத்தட்ட 6,000 அட்டைப் பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 30 வயது மலேசிய ஓட்டுநர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று கூடுதல் சோதனைக்காக நிறுத்தப்பட்டதாக குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையம் கூறியது.

"சோதனையின்போது, 5,599 அட்டைப்பெட்டிகள் மற்றும் ஒன்பது பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்," என்று அது தெரிவித்தது. அதையடுத்து அந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் ஆணையம் சொன்னது.