'த பெட்டெல்ஸ்' கூட்டுரிமை குடியிருப்பிலுள்ள மீன் குளத்தில் 51 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.
97 ஹில்வியூ அவென்யூவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து இன்று காலை 7.02 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. 'கோய்' மீன்கள் நிறைந்த அந்தக் குளத்தில் அசைவின்றிக் கிடந்த அந்தப் பெண் மாண்டுவிட்டதாகத் துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.
இதன் தொடர்பில் போலிஸ் விசாரணை நடந்து வருகிறது.

