‘உடற்குறையுள்ளோரில் 25% வேலையில் உள்ளனர்’

உடற்குறையுள்ளோரில் 25 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வேலையில் உள்ளனர் என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை தேடுவோரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உயரும். அதாவது, உடற்குறையுள்ளோரில் 28.6 விழுக்காட்டினர் வேலையில் உள்ளனர். மற்றொரு 4.2 விழுக்காட்டினர் வேலை தேடுகின்றனர்.

எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கினர் ஊழிரணியில் இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் உடல்நலப் பிரச்சினைகளையும் உடற்குறையையும் முக்கிய காரணங்களாக சுட்டியதாக திரு ஸாக்கி கூறினார்.

மனிதவள அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்து இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டன.

சமூகம், உணவுச் சேவை, நிர்வாகம் மற்றும் ஆதரவுச் சேவை, உற்பத்தி உள்ளிட்ட தொழில்துறைகளே உடற்குறையுள்ளோரை வேலையில் சேர்த்துக்கொள்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!