'ஷாப்பி'யின் புதிய வட்டார தலைமையகம் திறப்பு

'ஷாப்பி'யின் புதிய வட்டார தலைமையகம் திறப்பு

1 mins read
a2766ca9-d1fd-4946-bfde-ee9afc923dfa
உள்ளூர் இணைய விற்பனைத் தளமான 'ஷாப்பி'யின் வட்டாரத் தலைமையகத்தைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று திறந்து வைத்தார். -

உள்ளூர் இணைய விற்பனைத் தளமான 'ஷாப்பி', கெண்ட் ரிட்ஜ் வட்டாரத்தில் அதன் புதிய ஆறு மாடி வட்டார தலைமையகத்தைத் திறந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 'ஷாப்பி' தொடங்கப்பட்டது முதல், தென்கிழக்காசியாவின் முன்னணி இணைய விற்பனைத் தளமாக அது உருவெடுத்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தைவான் ஆகிய நாடுகளில் அது செயல்படுகிறது.

அதன் வட்டாரத் தலைமையகத்தைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று திறந்து வைத்தார். பொருளியலை வளர்ப்பதற்கான சிங்கப்பூரின் திட்டங்களுக்கு 'ஷாப்பி'யின் வளர்ச்சி ஒத்துப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

வெறும் 10 ஊழியர்களுடன் அறிமுகம் கண்ட இந்த நிறுவனத்தின் ஆள்பலம் நான்கே ஆண்டுகளில் 1,500 ஊழியர்களாக அதிகரித்துள்ளது.