எஸ்பிபியிலிருந்து சியாம் சீ தோங் தலைவர் பதவியிலிருந்து அக்டோபர் மாதம் விலகலாம்

எஸ்பிபியிலிருந்து சியாம் சீ தோங் தலைவர் பதவியிலிருந்து அக்டோபர் மாதம் விலகலாம்

1 mins read
d6b27ed7-c4a2-4a25-a90d-d5952cd11ee6
-

மூத்த எதிர்க்கட்சித் தலைவர் சியாம் சீ தோங், சிங்கப்பூர் மக்கள் கட்சியின் (எஸ்பிபி) தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக அவர் அந்தக் கட்சியை வழிநடத்தியுள்ளார்.

எஸ்பிபி கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாதாரண கட்சி மாநாட்டில் புதிய தலைமைத்துவக் குழு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படும் என்று அந்தக் கட்சி புதன்கிழமை காலை ஃபேஸ்புக்கில் அறிவித்தது. சிங்கப்பூர் மக்கள் கட்சி புத்துயிர் பெறுவதற்கும் அதன் தலைமைத்துவம் புதுப்பிப்பு அடைவதற்கும் அக்டோபரில் நிகழவிருக்கும் சாதாரண கட்சி மாநாடு வாய்ப்பினை வழங்கும் என்று அந்தக் கட்சியின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.