ஜூரோங்கில் கீழே கிடந்த மண்டையோடு

ஜூரோங்கில் கீழே கிடந்த மண்டையோடு

1 mins read
c9c4935c-dcb9-48fa-ac67-1166b896c4e1
-

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்திலுள்ள 'ஜூரோங் பூங்கா இணைப்புப்' பகுதியில் 'ஸ்டாம்ப்' செய்தித்தள வாசகர் சிவனேஷ் நடந்துகொண்டிருக்கையில் புல் தரையில் மண்டையோடு ஒன்றைக் கண்டார்.

சதை, முடி எதுவுமின்றி அது வெறும் மண்டையோடாக இருப்பதை சிவனேஷ் எடுத்த படங்கள் காட்டுகின்றன.

"இது விலங்கின் மண்டையோடா? அங்ஙணமாயின் இது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. இதை எப்படி ஒருவரால் செய்ய முடிகிறது?" என்று அவர் கூறியதாக ஸ்டாம்ப் தெரிவித்தது.

ஸ்டாம்ப் தளத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஏக்கர்ஸ் விலங்கு நல ஆர்வலர் குழுவின் தலைமை நிர்வாகி திரு கலைவாணன், இது காட்டுப்பன்றியின் மண்டையோடு போல காணப்படுவதாகத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் காட்டுப்பன்றிகள் அவ்வப்போது பொதுவெளியில் காணப்படுகின்றன. காட்டுப்பகுதிகளில் வாழும் இந்தப் பன்றிகள் சில நேரங்களில் உணவைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும்.