குறைவான வீவக மறுவிற்பனை வீடுகள் ஆகஸ்ட் மாதம் கைமாறின

இவ்வாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்புநோக்க, கடந்த மாதம் குறைவான வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. ஆனால், மாத அடிப்படையில் மறுவிற்பனை விலை சற்று அதிகரித்தது.

கடந்த மாதம் மொத்தம் 1,921 மறுவிற்பனை வீடுகள் கைமாறின. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், அது 9.4 விழுக்காடு குறைவு. சொத்துச் சந்தை இணையத்தளமான ‘எஸ்ஆர்எக்ஸ் புரோப்பர்ட்டி’ நேற்று வெளியிட்ட அதன் முன்னோட்ட மதிப்பீடுகளில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.

ஆண்டு அடிப்படையில், கடந்த மாதம் கைமாறிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 7.6 விழுக்காடு குறைந்தது.

கடந்த மாதம் விற்பனையான வீடுகளில் 42.2 விழுக்காடு நான்கறை வீடுகள். 23.7 விழுக்காடு ஐந்தறை வீடுகளும் 23.4 விழுக்காடு மூவறை வீடுகளும் ஆகும். 8.3 விழுக்காடு வீடுகள் எக்சிகியூட்டிவ் வீடுகளாகும். மறுவிற்பனையான எஞ்சிய வீடுகள் பல தலைமுறையினருக்கான வீடுகளும் ஈரறை வீடுகளும் ஆகும்.

மாத அடிப்படையில், கடந்த மாதம் மறுவிற்பனை வீட்டு விலை 0.1 விழுக்காடு கூடியது. எனினும், ஆண்டு அடிப்படையில், கடந்த மாதம் மறுவிற்பனை வீட்டு விலை 0.6 விழுக்காடு குறைந்தது. 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்சத்தை எட்டிய மறுவிற்பனை வீட்டு விலையுடன் ஒப்புநோக்க, கடந்த மாதம் விலை 14.1 விழுக்காடு இறக்கம் கண்டது.

ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் மறுவிற்பனை விலை 0.4 விழுக்காடு அதிகரித்தது. ஆனால், முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் விலை 2.1 விழுக்காடு சரிந்தது.

தஞ்சோங் பகாரில் உள்ள பினக்கல்@டக்ஸ்டன் வீவக பேட்டையில் ஐந்தறை வீடு ஒன்று ஆக அதிக பரிவர்த்தனை விலையைப் பதிவு செய்தது. கடந்த மாதம் அந்த வீடு $1.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இவ்வாண்டு சதுர அடி ஒன்றுக்கு $1,000க்கு மேல் மறுவிற்பனையான எட்டு வீவக வீடுகளில் அதுவும் ஒன்று.

ஹவ்காங்கில் 22 ஆண்டுகால எக்சிகியூட்டிவ் வீடு ஒன்று $831,500க்கு விற்பனையானது. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் ஆக அதிக விலைக்கு விற்பனையான வீடு இதுவே.

எஸ்ஆர்எக்ஸ் நிறுவனத்தின் முன்னுரைப்பின்படி, அடுத்த மூன்று மாதங்களில் 1,511 வீவக வீடுகள் மறுவிற்பனை சந்தைக்குள் நுழையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!