காட்டுப்பன்றியை மோதிய கார்; மண்டாய் ரோட்டில் நெரிசல்

காட்டுப்பன்றியை மோதிய கார்; மண்டாய் ரோட்டில் நெரிசல்

1 mins read
c0875b1b-3efd-4f8f-b118-f8bc31a97338
-

காட்டுப்பன்றியை கார் ஒன்று மோதியதாலும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய மற்றொரு விபத்தாலும் மண்டாய் ரோட்டில் பெரும் நெரிசல் ஏற்பட்டிருந்தது.

புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மண்டாய் ரோட்டில் வியாழக்கிழமை ( 5 செம்டம்பர்) காலை 6.50 மணிக்கு அந்த விபத்துகள் அடுத்தடுத்து நடந்தன. இதனால் சாலைப்போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமடைந்தது.

எதிர்வரும் வாகனம் ஒன்றால் அந்தக் காட்டுப்பன்றி மோதப்பட்டு உயிரிழந்ததாக வான்பாவ் நாளிதழ் குறிப்பிட்டது. விபத்துக்குப் பிறகு அந்த வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்தைவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது நடந்த சற்று நேரத்தில் நான்கு வாகனங்களுடன் தொடர்புடைய விபத்து நடந்தது. இதில் காயமடைந்த 20 வயது ஆடவர் கூ டெக் புவாட் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.