தனிநபர் நடமாட்டச் சாதனம்; குற்றச்செயல்கள் அதிகரிப்பு

தனிநபர் நடமாட்டச் சாதனம்; குற்றச்செயல்கள் அதிகரிப்பு

1 mins read
0138bbcb-d410-429c-8eb1-e88b22c84964
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

தனிநபர் நடமாட்டச் சாதனங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்கம் அண்மையில் பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இருந்தாலும் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான குற்றச் செயல்கள் ஆகஸ்டு மாதத்தில் அதிகரித்துள்ளன.

அந்த மாதத்தில் மட்டும் 761 நடமாட்டச் சாதனம் தொடர்பான குற்றச் செயல்களைக் கண்டுபிடித்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

இது, முந்தைய மாதத்தில் நடந்த 596 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.

ஆகஸ்டு மாதத்தில் கைப்பற்றப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் எண்ணிக்கை 176, ஜூலை மாதம் கைப்பற்றப்பட்ட 44 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைவு.

இதற்கு முன்பு ஜூன் மாதத்தில் 327 குற்றச் செயல்களைக் கண்டுபிடித்த ஆணையம், 214 சாதனங் களைக் கைப்பற்றியது.

கடந்த மாதம் புவாங்ேகாக், ஜூரோங், ஈசூன் உட்பட தீவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

"ஆகஸ்டு மாதத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பெரும்பாலான குற்றச்ெசயல்கள் பதிவு தொடர்பானவை. பதிவு செய்யாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை சாலைகளில் அவர்கள் ஓட்டிச் சென்றனர்," என்று ஆணையம் விளக்கியது.

சென்ற ஜூலையிலிருந்து மின்-ஸ்கூட்டர்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யாத மின்-ஸ்கூட்டர்களை பொது இடங்களில் ஓட்டினால் முதல் முறை குற்றச் செயலுக்கு 2,000 வெள்ளி அபராதமும் மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.