'லிங்லிங்' புயல் காரணமாக சிங்கப்பூருக்கும் தென்கொரியாவின் சோல் மற்றும் பூசான் நகர்களுக்கும் இடைப்பட்ட ஆறு விமானச் சேவைகள் நேற்று நேரம் மாற்றி விடப்பட்டன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விவரங்களைத் தெரிவித்தது. எஸ்ஐஏவின் நான்கு சேவைகளும் இரண்டு சில்க்ஏர் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக அது கூறியது.

