தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயிரக்கணக்கான மக்களைக் காத்த காசநோய் மருத்துவர்

2 mins read
ae5e998e-40b0-44d1-ad2b-223f0c32c9c2
மருத்துவ மனையில் சேவையில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜேஎம்ஜெ. படம்: டத்தோ பால் சுப்பிரமணியம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் -

சிங்கப்பூரில் காசநோய் ஒழிப்பு முன்னோடி என்று போற்றப்படும் டாக்டர் ஜேம்ஸ் மார்க் ஜெயசெபசிங்கம் சுப்பிரமணியத்தைப் பற்றிய 'ஹி சேவ்ட் தௌசன்ட்ஸ்' என்ற ஒரு புத்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நலிஸா இப்ராஹிம் என்பவர் எழுதி இருக்கும் அந்தப் புத்தக்க வெளியீட்டு விழாவில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கலந்துகொண்டார்.

டாக்டர் ஜேஎம்ஜெ என்று குறிப்பிடப்படும் அந்த மருத்துவர் ஆற்றிய தொண்டுகளை எல்லாம் நினைவுகூர்ந்த அமைச்சர், ''அவர் கருணைமிகுந்த, அடக்கமே உருவான ஒரு பெரிய மனிதர். மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியவர். கருணை, அன்புடன் பல உயிர்களைக் காத்தவர். விளம்பரம் நாடாதவர்,'' என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது இங்கு காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. அப்போது மருத்துவப் பொருட்களைக் கடத்தி வந்து இந்த மருத்துவர் பலருக்கும் உதவி இருக்கிறார்.

சிங்கப்பூரில் புகைப்பிடிப்பதற்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கும் உந்துசக்தியாக இவர் இருந்து இருக்கிறார்.

1940ல் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த டாக்டர் ஜேஎம்ஜெ இரண்டாம் உலகப் போர் காரணமாக படிப்பைத் தொடர முடியவில்லை.

போருக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெற்ற அவர், 1955ல் பிரிட்டனில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.

37 வயதில் சிங்கப்பூர் திரும்பி இங்கு பல பதவிகளை அவர் வகித்தார். 1981ல் கடைசியாக ஓய்வு பெற்ற இவர், தன் மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வந்தார்.

பல தடவை வாதம் பாதித்த காரணத்தினால் 2008ல் தன்

ளஇல்லத்தில் டாக்டர் ஜேஎம்ஜெ அமைதியான முறையில் காலமானார்.