பயங்கரவாத தடுப்புக்காவல் கைதி களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் மறுவாழ்வு உதவிகளை வழங்குவதில் ஈடுபட்ட 400 தொண்டூழியர்கள் நேற்று மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.
உள்துறை அமைச்சு ஏற்பாட்டில் நேற்று நடந்த சமூக தொண்டூழியர்களுக்கான 15வது பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ரீஜண்ட் சிங்கப்பூரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர், தடுப்புக்காவல் நபர்களின் மறுவாழ்வில் தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பு உதவிகள் உயிர்நாடியானவை என்று குறிப்பிட்டார்.
அத்தகைய தொண்டூழியர்களின் கடப்பாடு, வளர்ச்சி கண்டு வந்திருப்பதாக நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் கூறினார்.
மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் ஆகியோரும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

