பேருந்து நிறுத்தத்தை இடித்த கார்; மருத்துவமனையில் மூவர்

பேருந்து நிறுத்தத்தை இடித்த கார்; மருத்துவமனையில் மூவர்

1 mins read
d7cff965-34fd-4596-95c7-38201b477548
-

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென பாதை தவறி பேருந்து நிறுத்தத்தை இடித்ததில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

ஜாலான் புக்கிட் மேராவை நோக்கிச் செல்லும் கம்போங் பாரூ ரோட்டில் இந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் போலிசாருக்கும் நேற்றிரவு 11.43 மணிக்குத் தகவல் கிடைத்தது.

விபத்தில் காயமடைந்த 28 வயது பெண்ணும் 10 மாத ஆண் குழந்தையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காயம்பட்ட மூன்றாவது நபரான 27 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அந்த ஆடவர் காரின் ஓட்டுநராகவும் பெண்ணும் குழந்தையும் அதன் பயணிகளாகவும் இருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனைவருமே சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.