ஒரு சாலையில் வாகனங்கள் வரும் பாதையில் செல்லாமல் சட்டவிரோதமாக எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்ற ஒரு மாதை போலிஸ் விசாரித்து வருகிறது.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது.
அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் சவுத் பிரிட்ஜ் ரோட்டை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு 10.24 மணிக்கு ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்ற இந்த விவகாரம் பற்றி போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. 32 வயது மாது ஒருவர் இப்போது போலிஸ் புலன்விசாரணையில் உதவி வருகிறார். இணையத்தில் இந்தச் சம்பவத்தைக் காட்டும் பதிவுகள் 2,000க்கும் மேற்பட்ட தடவை பகிரப்பட்டன.
இணையத்தில் Road.sg என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி 5 மணி நேரத்தில் 35,000க்கும் மேற்பட்ட தடவை பார்க்கப்பட்டது.

