டாக்சி, வாடகைக் கார் சேவை குறையாது

டாக்சி, வாடகைக் கார் சேவை குறையாது

1 mins read
ecee15ff-bd43-40c7-989b-ef6e512bf574
-

வாடகைக் கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் உச்சநேரமற்ற இதர நேரங்களில் அஞ்சல் பொருட்களைக் கொண்டு கொடுக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பயணி களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகளின் எண்ணிக்கை குறையாது. ஆகையால் அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கிராப் நிறுவனம் இத்தகைய அஞ்சல் விநியோக சேவையைத் தொடங்கியதை அடுத்து கம்பர்ட்டெல்குரோ நிறுவனமும் தானும் அது பற்றி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தது. எஸ்எம்ஆர்டி டாக்சிஸ், கோஜெக், டாடா ஆகிய நிறுவனங்களும் எல்லா வற்றையும் பரிசோதித்துப் பார்க்கத் தாங்கள் தயார் என்று தெரிவித்து உள்ளன.

நிறுவனங்களின் இத்தகைய நிலை காரணமாக பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.