பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி மூவர் காயம்

பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி மூவர் காயம்

1 mins read

பிளேர் ரோடும் கம்போங் பாரு ரோடும் சந்திக்கும் இடத்திற்கு அருகே பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு கார் மோதிவிட்டது. சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்தில் கைக்குழந்தை உட்பட மூன்று பேர் காயம் அடைந்துவிட்டார்கள்.

28 வயது மாதும் 10 மாத கைக்குழந்தையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதசாரியான 27 வயது ஆடவர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலிசும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

விபத்தில் சிக்கிய கார், கம்போங் பாரு ரோட்டில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று சறுக்கிச் சென்று பேருந்து நிறுத்தத்தில் மோதிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.