காலாங் ஆற்றின் நெடுகே 1.8 கி.மீ. பகுதி புதுப்பொலிவு பெற்று இருக்கிறது. இப்போது அந்தப் பகுதி மிகவும் அழகாக இருக்கிறது. அதோடு மட்டுமின்றி மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அங்கு புதிய வசதிகள் இருக்கின்றன.
ABC Waters @ Kallang River எனப்படும் அந்தப் புதுப்பிப்புத் திட்டம் $86 மில்லியன் செலவில் நான்கு ஆண்டு காலம் நடந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும் அந்த ஆற்றைப் பலப்படுத்தவும் இந்தத் திட்டம் இடம்பெற்றது. இப்போது காலாங் ஆறு அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு இருப்பதால் 80 விழுக்காடு அதிக தண்ணீர் அந்த ஆற்று வழியாக வடிந்து ஓட முடியும்.
பொதுப் பயனீட்டுக் கழகம் மேற்கொண்ட வடிகால் மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் முடிவுற்றன.
அந்தப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

