கேலிப்பேச்சைப் பொய்ச் செய்தி என்று கூறிய பதிவிற்காக மன்னிப்பு கேட்டது ஊடக கல்வியறிவு மன்றம்

பொய்ச் செய்திகளின் வகைகளை எடுத்துரைத்த படவிளக்கத்தில் கேலிப்பேச்சை (அங்கதம்) பொய்ச் செய்தி என வர்ணித்த ஃபேஸ்புக் பதிவிற்காக ஊடக கல்வியறிவு மன்றம் மன்னிப்பு கேட்டுள்ளது. பொய்ச் செய்திகளைப் பற்றிய பதிவே பொய்ச் செய்தியாக இருப்பது தவறு என இணையவாசிகள் கொதிப்படைந்ததைத் தொடர்ந்து மன்றம் மன்னிப்பு கேட்டது.

அந்தப் படவிளக்கம் ஆறு வகையான பொய்ச் செய்திகளை எடுத்துரைத்தது – போலி சூழ்நிலை, ஆள்மாறாட்டம், சூழ்ச்சித்திற உள்ளடக்கம், தவறான எண்ணத்தை உண்டாக்கும் உள்ளடக்கம், ஆசைத்தூண்டில், கேலிப்பேச்சு ஆகியன அவை. ஆனால், கேலிப்பேச்சு ஒரு வகையான பொய்ச் செய்தி என்பதை ஏற்கமுடியாது என பலரும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்தனர். ஞாயிறு (செப்டம்பர் 8) மாலை 5 மணி வரை பதிவேற்றப்பட்ட 250 கருத்துகளில் பெரும்பாலானவை எதிர்ப்பாக அமைந்தன. மன்றமே பொதுமக்களுக்குத் தவறாக வழிகாட்டலாமா என சிலர் கேட்டனர். வேறு சிலர் மன்றம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றனர்.

இந்நிலையில், அந்தப் பதிவு கேலிப்பேச்சைப் பொய்ச் செய்தி என தவறான எண்ணத்தை அளித்திருப்பதாகவும், அப்படிப்பட்ட நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் ஊடக அறிவு மன்றம் அறிக்கை வெளியிட்டது.

“இந்தக் குழப்பத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பதிவை நாங்கள் பரிசீலனை செய்வோம்,” என்றும் மன்றம் குறிப்பிட்டது. “தவறான தகவல் அல்லது பொய்ச் செய்தி எவ்வாறு பரப்பப்படுகிறது என்பது பற்றி இளையரிடையிலும் பொதுமக்களிடையிலும் விழிப்புணர்வை வளர்ப்பதும், ஒரு தகவல் படைக்கப்படும் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள வாசகர்களை ஊக்குவிப்பதும் பதிவின் நோக்கம்.

“இணையப் பகுத்தறிவை ஊக்குவிக்க மன்றம் மேற்கொள்ளும் பணியின் ஒரு பகுதி இது. இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்த வாசகர்களுக்கு நன்றி,” என்றது அறிக்கை.

ஊடக அறிவு மன்றத்தின் பதிவு கடந்த வியாழக்கிழமை இணையத்தில் பதிவேற்றப்பட்டு, ஞாயிறு இரவு நீக்கப்பட்டது.

மே மாதம் நிறைவேற்றப்பட்ட “இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தில்”, கருத்துகள், குறைகாணல்கள், கேலிப்பேச்சு அல்லது நையாண்டி ஆகியன இடம்பெறவில்லை என சிங்கப்பூர் கேலிச்சித்திரக் கலைஞர் டேன் வோங் கூறினார். சட்டப் பரிந்துரையின் தொடர்பில் பொதுமக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், உண்மை விவரங்களின் பொய்யான கூற்றுகள் மட்டுமே சட்டத்தில் இடம்பெறும் என்றும், குறைகாணல்கள், கருத்துகள், கேலிப்பேச்சு, நையாண்டி ஆகியன இடம்பெறாது என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் வலியுறுத்தியிருந்தார்.

ஊடக அறிவு மன்றத்தின் பதிவு நீக்கப்படுவதற்கு முன்பாக 300க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!