விமானிகளின் வேலை நிறுத்தத்தால் சிங்கப்பூர் சேவைகள் பாதிப்பு

விமானிகளின் வேலை நிறுத்தத்தால் சிங்கப்பூர் சேவைகள் பாதிப்பு

1 mins read
9893748b-183e-4659-bcc9-fbbb972cb62a
-

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பளத் தகராறு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், சாங்கி விமான நிலையத்தைவிட்டு இன்று காலை புறப்பட வேண்டியிருந்த 'பிஏ12' விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் லண்டனிலிருந்து இங்கு இன்றிரவு 10.35 மணிக்கு வரவேண்டிய 'பிஏ12' விமானச்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம், இந்த வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்புக் கடிதத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இன்றைக்கும் நாளைக்கும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

வேலை நிறுத்தம் பற்றி பயணிகளுக்குச் சரியான முன்னறிவிப்பு கொடுக்காததன் தொடர்பில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கடுமையான விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ளது.