'5ஜி தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்கும்'

'5ஜி தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்கும்'

1 mins read
87688afb-70d4-430e-a5d1-a74a529e65ed
சிங்கப்பூரில் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு கிட்டத்தட்ட 60 விழுக்காட்டை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்தாம் தலைமுறை (5ஜி) கைபேசி தொழில்நுட்பத்தில் அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் மற்ற தென்கிழக்காசிய நாடுகளைவிட முன்னணியில் இருக்கும் என்றும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானம் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தொழில்துறை அறிக்கை ஒன்று கூறுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானம் 2025ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 370 மில்லியன் டாலர் ($510.8 மில்லியன்) முதல் 510 மில்லியன் டாலர் ($704 மில்லியன்) வரை கூடும் என எதிர்பார்ப்பதாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) வெளியிடப்பட்ட ஏடி கியர்னி அறிக்கை கூறுகிறது.

இவ்வட்டாரத்திலும் உலகெங்கிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானம் பரவலாக நிலைக்குத்தி இருக்கும் நிலையில், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் முழு முயற்சி எடுக்கவேண்டும் என அறிக்கை குறிப்பிட்டது.

ஆசியான் முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தின் மதிப்பு ஆண்டுக்கு 5.8 பில்லியன் டாலர் வரை எட்டக்கூடும் என்றும் அறிக்கை கணிக்கிறது.

சிங்கப்பூரில் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு கிட்டத்தட்ட 60 விழுக்காட்டை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.