மளிகைப் பொருட்கள்: விலைகளை ஒப்பிடும் செயலி

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பால் அல்லது மற்ற பொருட்களை வாங்குவதற்கு முன் அவை எங்கு மலிவாகக் கிடைக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கப் புதிய கைபேசிச் செயலி ஒன்று அறிமுகம் காணவுள்ளது. சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அறிமுகமாகும் இந்தச் செயலி, மளிகைப் பொருட்களின் விலைகளை மட்டுமல்லாது உணவு அங்காடிக் கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளின் விலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது.

‘பிரைஸ் காக்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலி இம்மாதப் பிற்பகுதியில் அறிமுக மாகும்போது பங்காளித்துவ அடிப்படையில் இதில் இணையும் வர்த்தகங்கள் அளிக்கும் விலைத் தகவல்களுடன் கடைகளில் பொருட்களை வாங்குவோர் அளிக்கும் விலைத் தகவல்களையும் கொண்டிருக்கும். இச்செயலியின் வழி, கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைகள் பற்றிய தகவல் தருவோர் அந்த விலைகளைப் சரிபார்க்கும் வண்ணம் விலைப் பட்டியல்களைப் படம் பிடித்து அனுப்ப வேண்டும். இதுபோன்ற தகவல்களைத் தரும் வாடிக்கையாளர்கள் மளிைகப் பொருட்கள் வாங்க, திரைப்படம் பார்க்க, போக்குவரத்தில் பயணம் செய்யப் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.

செயலியின் மூலம், ஒரு பொருளை வாங்க விரும்புவோர், அது ஆகக் குறைந்த விலையில் கிடைக்கும் இடம், விலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றைக் கண்டறியலாம்.

அத்துடன் தங்களுக்கு அருகில் இருக்கும் பேரங்காடிகள், உணவு அங்காடி நிலையங்கள் போன்றவற்றைக் கண்டறிவதுடன் வாடிக்கையாளர் ஒருவர் தான் விரும்பி உண்ணும் உணவை எங்கே என்ன விலையில் வாங்கலாம் என்பதையும் கண்டுகொள்ளலாம். செயலி, சோதனை அடிப்படையில் முதலில் ஜூரோங் வெஸ்ட், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு முற்பகுதியில் மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

31 பேரங்காடிகளுடன் 11 உணவு அங்காடி நிலையங்களும் இதில் சேர்க்கப்படும். தெம்பனிஸ் ஹப், தோ பாயோ வெஸ்ட் பகுதியில் உள்ள ஈரச்சந்தை மற்றும் உணவு அங்காடி நிலையம் ஆகியவற்றுடன் பூன் லே ஈரச்சந்தையுடன் கூடிய உணவு நிலையமும் இதில்அடங்கும்.

இந்தச் செயலி குறித்த தகவல்களை நேற்று நடைபெற்ற ஒரு நிதி திரட்டு நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் டான் வு மெங் வெளியிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!