5 புதிய எம்ஆர்டி நிலையங்கள் கட்ட $740 மி. மதிப்புள்ள ஒப்பந்தங்கள்

ஜூரோங் வட்டார ரயில்பாதையில் புதிதாக ஐந்து பெருவிரைவு ரயில் நிலையங்களைக் கட்டுவதற்கு $739.5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியிருக்கிறது.

சுவா சூ காங், சுவா சூ காங் வெஸ்ட், தெங்கா, ஹொங் கா, கார்ப்பரேஷன் ஆகிய அந்த ஐந்து புதிய நிலையங்கள் குறித்தும் ஆணையம் நேற்று தெரிவித்தது.

நிலையங்களின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் ஏழாவது ரயில் பாதையான ஜூரோங் வட்டார ரயில்பாதை, 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறக்கப்படவுள்ளது. இதில் மொத்தம் 24 நிலையங்கள் இருக்கும்.

ஜூரோங் வட்டாரத்தை இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக உருமாற்றும் திட்டத்தை முன்னிட்டு அங்கு போக்குவரத்து இணைப்பு இவ்வாறு மேம்படுத்தப்படுகிறது.

சுவா சூ காங், சுவா சூ காங் வெஸ்ட், தெங்கா ஆகிய நிலையங்களையும் அவற்றை இணைக்கும் 4.3 கிலோமீட்டர் நீள மேம்பாலத் தடத்தையும் வடிவமைத்து கட்டுவதற்கான $465.2 மில்லியன் ஒப்பந்தம் ஷங்காய் டனல் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏற்கெனவே தற்போதுள்ள சுவா சூ காங் ரயில் நிலையம் ஜூரோங் வட்டார ரயில்பாதையுடன் ஒருங்கிணைக்கப்படும்.

ஹொங் கா, கார்ப்பரேஷன் நிலையங்களையும் அவற்றுக்கு இடையில் உள்ள 3.4 கிலோமீட்டர் நீள மேம்பாலத் தடத்தையும் கட்டுவதற்கான $274.3 மில்லியன் ஒப்பந்தம் எங் லீ என்ஜினியரிங், வாய் ஃபொங் கன்ஸ்டிரக்‌ஷன் ஆகிய இரு உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

திட்டம் முழுமை அடைந்த பின்னர், புதிய ஜூரோங் வட்டார ரயில்பாதை தினமும் 500,000 பயணிகளுக்குச் சேவை வழங்கும் என கணிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!