மகனின் கழுத்தைப் பிடித்துத் தரையில் தூக்கி எறிந்த ஆடவருக்குச் சிறை

மகனின் கழுத்தைப் பிடித்துத் தரையில் தூக்கி எறிந்த ஆடவருக்குச் சிறை

1 mins read
e186b363-a366-4223-ae6a-3605b693d34c
-

தன்னுடைய எட்டு வயது வளர்ப்பு மகனைக் கழுத்தைப் பிடித்துத் தரையில் கிடந்த துணி மேல் தூக்கியெறிந்த 28 வயது ஆடவருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடவர் சமையலறையில் இருந்தபோது சிறுவன் தன்னை முறைத்துப் பார்த்ததாகவும் அதனால் எரிச்சலடைந்து அவனைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது. ஓர் உறவினர் போலிசாருக்குத் தகவல் அளித்ததை அடுத்து ஆடவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு எந்தக் காயமும் இல்லை.