குடும்பமே சேர்ந்து ஒரு பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்யும்போது

ஒரு தம்பதியால் அவர்களது பணிப்பெண்ணின் காது உருகுலைந்து போனது. மற்றொரு தம்பதி தங்களது பணிப்பெண்களுக்கு வெறும் சாதமும் தண்ணீரும் மட்டுமே உணவாகக் கொடுத்தனர். இன்னொரு தம்பதி தங்களது பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்ததோடு, பாத்தாமுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களது வெளிநாட்டுப் பணிப்பெண்களைச் சித்ரவதை செய்த சம்பவங்கள் இவை.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடையில் அரசு நீதிமன்றத்தில் பணிப்பெண் சித்ரவதையின் தொடர்பில் 47 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஊடகங்களில் வெளிவந்த இத்தகைய வழக்குகளில் குறைந்தது 11 வழக்குகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

சென்ற மாதம், தங்களது பணிப்பெண்களைச் சித்ரவதை செய்தததற்காக இரண்டு தம்பதிகள் தண்டிக்கப்பட்டனர். முன்னாள் வட்டாரத் தகவல் தொழில்நுட்ப மேலாளரான 41 வயது டே வீ கியாட், அவரது 34 வயது மனைவி சியா யுன் லிங் இருவரும் தங்களது இரண்டு பணிப்பெண்களையும் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் சென்ற மாதம் உயர்த்தியது. அதே மாதத்தில், 58 வயது சரியா முகம்மது அலி, அவரது 60 வயது கணவர் முகம்மது டஹ்லான் இருவரும் சுத்தியல், வாணலி போன்ற வீட்டுப் பொருட்களுடன் பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்ததற்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபோன்ற “கூட்டுச் சித்ரவதை” சம்பவங்கள், பள்ளியில் வம்பிழுப்பதைப் போன்றது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பள்ளியில் வம்பிழுக்கும் சம்பவங்களில் ஒருவர் தலைவராக இருப்பார், மற்றொருவர் அவரைப் பார்த்து அதேபோலச் செய்வார்.

பணிப்பெண்ணைப் பிரதானமாகச் சித்ரவதை செய்பவரை மற்ற குடும்ப உறுப்பினர்கள் சார்ந்திருக்கக்கூடும் என்பதால் அச்சத்தின்பேரில் அவர்களும் சேர்ந்து அவ்வாறு செய்யலாம் அல்லது தாங்களும் அவர்களில் ஒருவராக இருக்க விரும்பி அவ்வாறு செய்யலாம் என மனோவியலாளர் தாமஸ் லீ கூறினார்.

“இந்த அடிப்படையில், இதுவும் பள்ளியில் வம்பிழுப்பதைப் போன்றதே. ஆனால், பணிப்பெண்களுக்குச் செல்வதற்கு வேறிடம் இல்லாததால் இது மோசமாகிறது,” என்றார் அவர்.

சித்ரவதை செய்பவர்களுக்கு ஒருமித்த கொள்கைகளும் உந்துதல்களும் இருக்கலாம் என்றும், அதனால் அவர்கள் ஒன்றாகச் சித்ரவதை செய்யக்கூடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு மற்றவர்கள்மீது மிகக்குறைவான அக்கறையும் பச்சாதாபமும் இருக்கக்கூடும் என்றார் மனோவியலாளர் லிம் பூன் லெங்.

குற்றம் புரிவோர் இளவயதில் ஒரே மாதிரியான அனுபவத்தைக் கடந்துவந்திருக்கக்கூடும் என்பது மற்றொரு காரணம். இளவயதில் வன்கொடுமைக்கு இலக்காகி இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கு வன்கொடுமை வழக்கமான ஒன்றாகத் தோன்றலாம் என்றார் மனோதத்துவ நிபுணர் அனலிஸ் லாய்.

பணிப்பெண் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படுவதிலும் சிரமங்கள் உள்ளன.

கடந்த 2015 முதல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட 30க்கும் மேலான பணிப்பெண் சித்ரவதை சம்பவங்களில் பெரும்பாலானவை அண்டைவீட்டார் அல்லது வழிப்போக்கர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரால் அல்லது தப்பிச்சென்ற பணிப்பெண்களால் புகார் செய்யப்பட்டன. இதற்கு எளியதொரு காரணம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்: பெரும்பானோர் தங்களது உறவினர்கள் தவறிழைக்கும்போது புகார் செய்யமாட்டார்கள்.

பணிப்பெண்களைச் சித்ரவதை செய்வோருக்கான தண்டனையைக் கடுமையாக்க இவ்வாண்டு மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், மேம்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் நடப்பிலிருக்கவேண்டும் என கொள்கைவாதிகள் கோருகின்றனர். பொறுப்பமைப்புகள் அல்லது உதவி அமைப்புகள் பணிப்பெண்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என “ஹோம்” மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த குமாரி ஜெயா அனில்குமார் கூறினார்.

தற்போது முதல்முறையாகப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்வோரை மனிதவள அமைச்சுக்காக இல்லப் பணியாளர்கள் நிலையம் கண்காணிக்கிறது. இந்தக் கண்காணிப்பு அனைவருக்கும் அளிக்கப்படவேண்டும் என்றும், முதலாளிகள் இல்லாதபோது செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!