ஈசூன் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர்கள்

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கஞ்சா செடியை வளர்த்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் 44 வயது ஆடவர். மற்றொருவர் 52 வயது பெண்.

ஈசூன் ஸ்திரீட் 31லுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டுக்குள் அந்தச் செடிகள் இருப்பதை போலிசார் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது, கஞ்சா உட்கொள்வதற்கான கண்ணாடி கருவிகள், செடிகள், அந்தச் செடிகளை வளர்ப்பதற்கான செயல்முறைகளைக் கொண்ட குறிப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.