சேவைத் துறை நிறுவனங்களுக்கு புதிய திட்டம்; நிதி, நிபுணத்துவ உதவி

சேவைத் துறை நிறுவனங்களுக்கு புதிய திட்டம்; நிதி, நிபுணத்துவ உதவி

1 mins read
dba6a4df-776c-4a47-9bd2-a785d2669705
சேவைத் துறை நிறுவனங்கள் தங்களை உருமாற்றிக் கொள்ள நேற்று புதிய திட்டத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிமுகப்படுத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சேவைத் துறையில் உள்ள நிறு வனங்கள், மனிதவள மாற்றத்தை ஏற்று வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

இந்த உருமாற்றத்துக்கு உதவ அரசாங்கம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை சேவை நிறுவனங்கள் கண்டறிய முடியும். மேலும் நிபுணத்துவ உதவிகளை அவை பெற முடியும்.

புதிய சேவைத் துறை உருமாற்றத் திட்டத்தை நேற்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் 180 நிறுவனங்களும் 1,100 ஊழியர்களும் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி டியோ, தற்போதைய நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சில முத லாளிகள் கவலைப்படுகின்றனர் என்றார்.

"உருமாற்றத்தையும் எதிர்கால வேலைகளையும்விட தற்போதைய வேலைகளும் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவதும் சிறந்தது என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இரண்டுமே முக்கியம். தொழிலாளர் வரம்புக்குட்பட்ட சிங்கப்பூரில் குறுகிய, நீண்டகால போக்கில் குறைந்த ஊழியர்களுடன் வர்ததகம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது," என்றார் அமைச்சர் டியோ. சேவைத் துறை மாநாட்டில் நேற்று சுமார் 200 வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.