ஆகஸ்ட்டில் குறைவான வீடுகளே வாடகைக்கு விடப்பட்டன

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாடகைக்கு விடப்பட்ட தனியார் வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளதாக எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனத்தின் அண்மைய தகவல்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் கொன்டோமினிய வீடுகளுக்கான வாடகை அளவு சற்று உயர்ந்தும் வீவக வீடுகளுக்கான வாடகை சற்று குறைந்தும் உள்ளதாக ‘எஸ்ஆர்எக்ஸ்’ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆகஸ்ட் மாதம் 4,306 கொன்டோமினிய வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. ஜூலை மாதம் வாடகைக்கு விடப்பட்ட 5,252 வீடுகளின் எண்ணிக்கையைவிட இது 18% குறைவாகும். ஆண்டுக்காண்டு அடிப்படையில், 2018 ஆகஸ்ட்டுடன் ஒப்பிட சென்ற ஆகஸ்ட் மாத வாடகைக்கு விடப்பட்ட கொன்டோமினிய வீடுகளின் எண்ணிக்கை 17.5% சரிந்தது. எனினும் ஐந்தாண்டு சராசரி அளவின்படி பார்த்தால் கடந்த மாதம் சரிவு 1.6%தான் குறைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட கொன்டோமினிய வீடுகளில் $2,000 முதல் $4,000 வரை மாத வாடகைக் கொண்ட வீடுகள் 65% ஆகும்.

$4,001 முதல் $6,000 மாத வாடகைக் கொண்ட வீடுகள் 16 விழுக்காடும், $2000க்கும் குறைந்த மாத வாடகைக் கொண்ட வீடுகள் 19.3 விழுக்காடும் $6,001 முதல் $10,000 மாத வாடகைக் கொண்ட வீடுகள் 7.7 விழுக்காடும் இருந்தன. $10,000க்கு மேல் வாடகை கொண்ட வீடுகள் 1.4% அளவே இருந்தன. கொன்டோமினிய வீடுகளுக்கான ஒட்டுமொத்த வாடகை ஜூலை மாதத்துடன் ஒப்பிட ஆகஸ்டில் 0.2% உயர்ந்துள்ளது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3% உயர்ந்துள்ளது.

வீவக வீடுகளைப் பொறுத்தவரையில் மாத அடிப்படையில் வாடகை ஐந்தில் ஒரு பங்கு அல்லது 22% குறைந்துள்ளது. வீவக வீடுகளுக்கான ஒட்டுமொத்த வாடகை ஓரளவு நிலைத்தன்மையுடன் உள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிட ஆகஸ்டில் 0.1% உயர்ந்துள்ளது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் 0.7% உயர்ந்துள்ளது.

மூவறை, எக்ஸிகியூட்டிவ் வீடுகளுக்கான வாடகை ஜூலை மாதத்துடன் ஒப்பிட முறையே ஆகஸ்ட் மாதத்தில் 1.1%, 0.25 உயர்ந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!