டாக்சி மோதி முதியவர் மரணம்

அலெக்சாண்ட்ரா ரோட்டிலுள்ள ‘இக்கியா’ கடைக்கு அருகே டாக்சியால் இடிக்கப்பட்ட 77 வயது முதியவர் கடந்த சனிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

ஓய்வுபெற்ற டாக்சி ஓட்டுநரான திரு ஓ ஆ லெக், தமது குடும்பத்தாருடன் இக்கியா கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். அருகிலுள்ள சாலை ஒன்றைத் திரு லோ கடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கடையின் வாகனக் காத்திருப்பு இடத்திலிருந்து ஒரு டாக்சி வெளிவந்து அவரை மோதியதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தெலுக் பிளாங்கா ரோட்டை நோக்கிச் செல்லும் அலெக்சாண்ட்ரா ரோட்டில் டாக்சிக்கும் பாதசாரிக்கும் இடையிலான விபத்து குறித்து கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணி வாக்கில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த முதியவர் பின்னர் உயிரிழந்தார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது. 

திரு ஓ, விபத்தின்போது டாக்சியின் அடியில் சிக்கிக்கொண்டதாக அவரது மனைவி 76 வயது திருவாட்டி லாம் காம் யாம்  வான்பாவ்விடம் தெரிவித்தார். 

Loading...
Load next