‘இரு நாடுகளுக்கும் வலிமை சேர்ப்பது பன்முகத்தன்மை’

சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களைக் கொண்டுள்ளன. இந்தப் பன்முகத்தன்மையே இரு நாடுகளுக்கும் வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

பிலிப்பீன்சுக்கான ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்ட அதிபர் ஹலிமா நேற்று தமது பயணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அதிபரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 50 ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

“பன்முகத்தன்மையை ஊக்கப்படுத்துவதில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். பன்முகத்தன்மை இல்லாத சிங்கப்பூரை என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த வகையில் சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன.

“நீங்கள் ஒருமுகத்தன்மை கொண்ட சமூகமாக இருந்தாலும், நீங்கள் வெளியுலகைக் கையாளும் போது வெவ்வேறு விதமான மனி தர்களுடன் கலந்துறவாட வேண்டியிருக்கும்.

“பன்முகத்தன்மை உங்களுக்கு சகிப்புத்தன்மை, தயாளகுணம், புரிந்துணர்வு ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும்,” என்றார் அதிபர் ஹலிமா.

“உங்கள் அண்டை வீட்டுக்காரர் மற்றோர் இனத்தையோ, சமயத்தையோ கொண்டிருக்கும்போது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் போக்கு அங்கு தானாக வந்துவிடும்.

“அது உங்களது புரிந்துணர்வை மேம்படுத்தி, உங்களைச் சிறந்த மனிதராக்கும். அதன் மூலம் நீங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கு நன்மை பயக்கிறீர்கள்.

“பன்முகத்தன்மையில் ஒரு பலம் உள்ளது. அது உலகம் முழுதும் பரவியுள்ளது. உலக மக்கள் பன்முகத்தன்மையை விரும்பி, மதிக்கிறார்கள். அது உலகில் மாற்றத்தைக் கொண்டு வரும்,” என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.

பிலிப்பீன்சின், மின்டானோ, டாவோ நகரில் உள்ள அட்டினியோ டி டாவோ பல்கலைக்கழகத்தில் சுமார் 50 இளையர்களுடன் நேற்று முன்தினம் உரையாடிய அதிபர் ஹலிமா, மரியாதையுடனும் அர்த்தத்துடனும் பன்முகத்தன்மையுடனும் சமூகங்களுக்கிடையே உரையாடலை ஏற்படுத்துவது எளிதானதல்ல என்றார்.

பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டி எழுப்ப, தற்போது நாம் மேற்கொண்டு வருவதைப் போன்ற தொடர்ச்சியான உரையாடலும் ஈடுபடுத்தலும் முக்கியம் என்று கூறினார் திருவாட்டி ஹலிமா.

நேற்று முன்தினம், வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்குத் மனிதாபிமான உதவிகள் புரியும் ‘ஃபெய்த்ஸ் அட் வொர்க்’ எனும் வட்டாரக் கட்டமைப்புக் குழுவின் 20 இளைய பங்கேற்பாளர்களைச் சந்தித்த அதிபர் ஹலிமா, சமயங்

களுக்கு இடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவை குறித்து பேசினால், பல நன்மைகள் ஏற்படும் என்றார்.

கடந்த திங்கட்கிழமை பிலிப் பீன்ஸ், சிங்கப்பூர் அமைப்புகளுக்கிடையே எட்டு உடன்பாடுகள், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட் ரிகோ டுட்டர்டே இருவரின் முன்னிலையில் கையெழுத்தாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!