மின்தூக்கி ஏறுகாலில் தீ

பொங்கோல் பிளேஸ் புளோக் 207சியின் மின்தூக்கி ஏறுகாலில் (shaft) தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி  இரவு 7.30 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

கட்டடத்தின் 16ஆம் மாடியில் மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயை, காய்ந்த பொடி தீயணைப்பானைக் கொண்டு அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர். சம்பவத்தின்போது மின்தூக்கியில் எவரும் இல்லை என்றும் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது.

தீச்சம்பவத்தைக் காட்டும் படங்கள் சிலவற்றை ‘ஸ்டாம்ப்’ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

 

Loading...
Load next