$300மி. செலவில் மாற்று வழி கால்வாய் மேம்பாடு

சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படுமானால் அதை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள புக்கிட் தீமா கால்வாயின் மாற்று வழி $300 மில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நீர் முகவையான பியுபி கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளன.

இந்த மேம்பாட்டுப் பணிகளின் நிறைவு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்ஃபிப்லி, பியுபி மேற்கொண்ட மிகவும் சிக்கலான, செலவுமிக்க பணிகளில் இதுவும் ஒன்று எனக் கூறினார்.

எனினும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீவிரமான போக்கை எதிர்கொள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள் தேவையான ஒரு முதலீடு என்று அவர் ெதரிவித்தார்.

“கொட்டித் தீர்க்கும் மழை, நீடித்த வறட்சி என பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

“2100ஆம் ஆண்டில், கடல்நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரக்கூடும். அத்துடன், அன்றாட சராசரி வெப்ப நிலை 4.6 டிகிரி ெசல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பருவநிலை கடுமையான மாற்றங்களைக் கொண்டிருப்பதுடன் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் நிலையும் உண்டாகலாம். கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் இந்த மாற்றங்களை நாம் எதிர்கொள்ள உதவியாக அமையும்,” என்று அவர் விளக்கினார்.

இந்த மாற்று வழிக் கால்வாய் 3.2 கிலோ மீட்டர் நீளம் ெகாண்டது என்பதுடன், மேம்பாட்டுப் பணிகளுக்குப் பின் இது கூடுதலாக 30 விழுக்காடு மழை நீரைக் ெகாண்டு செல்ல முடியும் என்று பியுபி கூறியுள்ளது. கால்வாயை ஆழப்படுத்துவது, அதை அகலமாக்குவது ஆகியவற்றுடன் மேம்பாட்டுப் பணிகளில் மேலும் பல சுரங்கப் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டன.

இவை யாவும் புக்கிட் தீமா, டன்னர்ன் சாலைப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவும்.

இந்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கையால், நீ ஆன் பலதுைறத் தொழிற்கல்லூரி, பியூட்டி வேர்ல்ட் பிளாசா, புக்கிட் தீமா கடைத் தொகுதி பேன்றவை பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. எனினும், பல்வேறு சவால்மிக்க சூழல்களால் இந்தத் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. கால்வாய் ேமம்பாட்டுத் திட்டம் பல கடுமையான முட்டுக்கட்டைகளைச் சந்தித்ததாக பியுபியின் நீர்வழி, நீர்த்ேதக்கப் பிரிவு இயக்குநரான திரு இயோ கெங் சூன் கூறினார்.

“அங்குள்ள மலைமேட்டுப் பகுதி, எதிர்பார்த்ததற்கு மாறாக பூமிக்குக் கீழேயிருந்த கடுமையான நிலப்பகுதி போன்றவையால் நில அகழ்வு பணிகளுக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டியதாயிற்று,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!