‘மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கொள்கைகள் தொடரும்’

எதிர்கால சவால்களுக்காக சிங்கப்பூரர்களைத் தயார் செய்ய அரசாங்கம் பணியாற்றி வந்தாலும், தலைமுறை தலைமுறையாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கொள்கைகளுக்கு மக்கள் செயல் கட்சி (மசெக) கட்டுப்பட்டு நடக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

“சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மசெக அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும். இதைச் சாதிக்க வேண்டுமென்றால் நாம் அடித்தளத்துக்குச் சென்று, மக்களின் தேவைகளை நன்கு அறிந்து, அதற்கேற்ப சரியான கொள்கைகளை வகுத்து, அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும்,” என்று அவர் விவரித்தார்.

நேற்று நடைபெற்ற மசெக மகளிர் அணியின் வருடாந்திர மாநாட்டில் திரு ஹெங் முக்கிய உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தல், அவர்களை சமூக நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்க ஊக்குவித்தல் போன்றவை மசெக மகளிர் அணியின் முக்கிய பணிகள் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

மசெக தோற்றம் கண்டு 35 ஆண்டுகள் கழித்து அதன் மகளிர் அணி 1989ஆம் ஆண்டில் தோற்று விக்கப்பட்டது என்றாலும், பெண் களுக்கு அதிக உரிமை கொடுக்கும் அம்சம் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளதைச் சுட்டினார்.

1959ஆம் ஆண்டில் மசெகவின் முதல் தேர்தல் வெற்றிக்கு பெண்கள் பேராதரவு முக்கிய காரணம் என்றும் திரு ஹெங் கூறினார்.

“மசெகவின் தகுதிக்கு முன் னுரிமை எனும் கொள்கை சரிசம மான கல்வி, சரிசமமான வாய்ப்பு என்று பெண்களுக்கு அதிக வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது,” என்று குறிப்பிட்ட திரு ஹெங், “இது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பாரம்பரிய பிரிவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கும் நாடுகளிலிருந்து சிங்கப்பூரை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்றும் விளக்கினார்.

“சமூகத்தில் பெண்களின் தலைமைத்துவப் பங்களிப்பு, அது அரசியல், பொதுத் துறை, தனியார் துறையில் அதிகரிக்க வேண்டும் என்று பார்க்க விரும்புகிறேன்.

“மசெக மகளிர் அணி தொடங்கப்படும்போது நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது 20 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எட்டு பெண்கள் அரசியல் பதவிகளையும் வகிக்கிறார்கள். அவர்களில் நாட்டின் ஆக உயர்ந்த பதவியை அதிபர் ஹலிமா யாக்கோப் வகிக்கிறார்,” என்றும் திரு ஹெங் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!