யேல்-என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறையான எதிர்ப்பு, அவற்றை எவ்வாறு தெரிவிப்பது என்பது ெதாடர்பான பாடத் திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தை சிங்கப்பூர் நாடகாசிரியரான அல்ஃபியான் சாஆட் நடத்துவதாக இருந்ததுடன் இந்தப் பாடத்திட்டத்தை நிர்வகிப்பவராக அந்த பல்கலைக்கழகத்தின் திரு டான் யோக் தெங் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
'வைல்ட் ரைஸ்' உள்ளூர் நாடகத் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் கவிஞர், நாடகாசிரியர், திரு அல்ஃபியான் சாஆட் இனம், பாலினம், அரசியல் போன்ற அம்சங்களை அலசியுள்ளார்.
இப்பாடத்திட்டம் செப்டம்பர் 29லிருந்து அக்டோபர் 5 வரை நடைபெறுவதாக இருந்தது என்றும் அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
எதிர்ப்பின் பல்வேறு முறைகள், எதிர்ப்பை ஒழுங்கமைப்பது போன்றவை குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இப்பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து யேல் பல்கலைக்கழகம் நேற்று கவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்நடவடிக்கை கல்விப் புலத்தின் சுதந்திரத்தையும் வெளிப்படையான கல்விகேள்வியையும் பயமுறத்துவதாக அமையலாம் என்றும் அது கூறியது.

