திறன் மேம்பாடு பற்றி சில சிந்தனைகள்

வாழ்க்கைத்தொழிலை இன்னும் அதிக நாள் செய்ய விரும்புவோருக்கும் வேலை மாற்றம் செய்ய நினைப்போருக்கும் மூத்த ஊழியர்களுக்கான மூத்தரப்புப் பணிக்குழு யோசனைகள் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் தொழிலைத் திட்டமிடுவதற்கான கலந்துரையாடல்களை நடத்தும்படி முதலாளிகளுக்கு அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. முதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்கள் வேலைத் திட்டம் குறித்து கலந்துரையாடலாம். இதுபோன்ற திட்டமிடுதலைச் செய்ய அறுபது வயது வரை காத்திராமல் நாற்பதுகளிலேயே தொடங்கவேண்டும் என்று அந்தக் குழு, தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அத்துடன் வேறு சில பரிந்துரைகளையும் அது வெளியிட்டுள்ளது.

1. எந்தெந்த திறன்களை நீங்கள் மேம்படுத்தலாம் என்பது குறித்து நீங்கள் முதலாளிகளிடத்திலும் தொழிற்சங்கங்களிடத்திலும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். புதியவற்றைக் கண்டு நீங்கள் அஞ்சாதீர்கள்.

2. நேரம் கடத்தாமல் திறன் மேம்பாடு பற்றி சிந்தித்து கவனமாகத் திட்டமிடுங்கள்.

3. நடவடிக்கை எடுங்கள், மற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள், கூட்டணிகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

4. திறன் மேம்பாடு என்பது இனிமேல் சில மணி நேரம் நீடிக்கக்கூடிய பயிலரங்குகள் மூலமாகச் செய்யக்கூடியதல்ல.

5. மிக ஆழமான திறன்களும் அவற்றைக் கற்றுக்கொள்வதற்கான நேரமும் நமக்குத் தேவைப்படுகிறது. கற்ற திறன்களைச் செம்மைப்படுத்தி அதில் தேர்ச்சி அடையவும் வேண்டும்.

6. திறன் மேம்பாட்டுக்கு உங்கள் நிறுவனம் ஆதரவு அளிக்காவிட்டாலும் நீங்கள் மனந்தளராமல் தனிநபராக முயலவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!