கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து

கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து

1 mins read
52cf57d7-a73e-4eba-b451-5e8802db2c28
முதல் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படையினர். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட முதல் கூட்டு கடற்படைப் பயிற்சி இந்தியாவின் பிளேர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில், மூன்று நாடுகளைச் சேர்ந்த ஐந்து கப்பல்களும் 500க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்பார்கள் என்று தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பிளேர் துறைமுகத்தில் இடம்பெற்ற பயிற்சியின் ஒரு பகுதியில் திட்டமிடல், நிபுணத்துவப் பரிமாற்றம் இடம்பெற்றன. நாளை தொடங்கவுள்ள அடுத்த கட்டப் பயிற்சி அந்தமான் கடற்பகுதியில் நடைபெறும். அங்கு கப்பலைச் செலுத்துவது, துப்பாக்கிச் சூடு போன்ற பயிற்சிகள் நடைபெறும்.

ஆர்எஸ்எஸ் டெனேஷியஸ் போர்க்கப்பலுடன் சிங்கப்பூர் கடற்படை இப்பயிற்சியில் ஈடுபடுவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.