தங்ளின் வில்லேஜ் பெருந்திட்டத்திற்கு காத்திருக்கும் வர்த்தகர்கள்

தங்ளின் வில்லேஜ் பகுதியின் மேம்பாட்டுத் திட்டங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வர்த்தகங்களில் டெம்ப்சி ஹில் கடைகளும் அடங்கும்.

அப்பகுதியின் மறுசீரமைப்புத் திட்டத்தின் இறுதி வடிவத்தை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.

டெம்ப்சி பகுதியின் பிரதான வாடகைதாரரான கன்ட்ரி சிட்டி இன்வெஸ்ட்மெண்ட்டின் 17 புளோக்குகளுக்கான குத்தகை இன்னும் ஆறு மாத காலத்தில் முடிகிறது. மேலும் 30 உள் வாடகைக்காரர்கள் தங்களது குத்தகை நீட்டிக்கப்படுமா எனக் காத்திருக்கின்றனர்.

சாமிஸ் கறியின் இயக்குநரான நாகஜோதி மெய்யப்பன், 1960களில் தமது தாத்தாவால் தொடங்கப்பட்ட கடை, அதே கட்டடத்தில் கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

அக்கட்டடம் முன்னர் பொதுச் சேவை மன்றமாக இருந்தது.

சாமிஸ் கறி முன்னர் டேங் ரோட்டிலும், பேர்ல்ஸ் ஹில்லிலும் இயங்கியது.

“வேறு இடத்துக்கு மாறுவதுபற்றி எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது. எங்களுக்கு வேறு திட்டம் எதுவும் இல்லை,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறிய அவர், அங்கேயே தாங்கள் தொடர்ந்த செயல்பட முடியும் என நம்புவதாகக் கூறினார்.

எனினும், அங்கு நீண்ட காலம் செயல்பட்டு வரும் இரு வர்த்தகங்களின் குத்தகை காலம் 2020 மார்ச் மாத்தில் முடியும்போது அவை, அந்தக் இடத்தைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நான்கு புளோக்குகளுக்கான ஏலக்குத்தகை அறிவிக்கப்பட்டது.

அப்பகுதியின் புத்தாக்கம், மேம்பாட்டுக்கான பெருந்திட்டத்தைத் தயாரித்து வருவதாக சிங்கப்பூர் நில ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மேலும் ஆறு புளோக்குகள், பழைய குத்தகைக் காலம் முடிந்ததும் புதிய ஏலக்குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!