பொதுவாக சொத்துப் பரிவர்த்தனை மந்தமாக இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 1,122 தனியார் வீடுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை யான 617 வீடுகளுடன் ஒப்பிட, 81.9% அதிகம். சென்ற ஜூலை மாதம் விற்கப்பட்ட 1,179 வீடுகளின் எண்ணிக்கை யைவிட இது 4.8% குறைவு. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'பாரக் கிளமாடிஸ்' தனியார் குடியிருப்பு வரவேற்பைப் பெற்றது இந்த விற்பனை உயர்வுக்குக் காரணம். எக்ஸிகியூடிவ் கொன்டோமினியம் தவிர்த்த, தனியார் வீட்டு விற்பனை புள்ளிவிவரங்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது. 'பாரக் கிளமாடிஸ்' தவிர்த்து புளோரன்ஸ் ரெசிடன்ஸ், டிரெஷர் அட் தெம்பனிஸ், பாக் பொட்டானியா, பாக் ஈஸ்டா ஆகிய தனியார் குடியிருப்புகளின் விற்பனை சிறப்பாக இருந்தது.
ஆகஸ்டில் தனியார் வீட்டு விற்பனை
1 mins read
கோப்புப்படம்: எஸ்டி -

