நான்காம் காலாண்டில் உள்ளூரின் வணிக நம்பிக்கை குறைந்தது

நான்காம் காலாண்டில் உள்ளூரின் வணிக நம்பிக்கை குறைந்தது

1 mins read
7b7afbc1-9fc7-4e85-8810-8c2442974e2d
சன்டெக் சிட்டி வட்டாரம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூர் வர்த்தக கடன் தகவல் இலாகா (SCCB) அண்மைய புள்ளிவிவரங்களின்படி 2019ன் நான்காம் காலாண்டின் வணிக நம்பிக்கை இரண்டு ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. உற்பத்தி, மொத்த விற்பனை வணிகங்கள் இறங்குமுகத்தை எதிர்நோக்குகின்றன. சிங்கப்பூர் எங்குமுள்ள 200 வணிக உரிமையாளர்கள், முக்கிய தொழில்துறைகளைப் பிரதிநிதிக்கும் மூத்த நிர்வாகிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிட, விற்பனை, லாபம், கொள்முதலுக்கான புதிய ஆர்டர்கள், வேலைவாய்ப்பு, சரக்கு நிலவரம் அனைத்தும் இந்த காலாண்டில் குறைந்துள்ளன. விற்பனை விலை மட்டும் -7.32 இலிருந்து -3.33 ஆகி உள்ளது. மூன்றாம் காலாண்டில் இந்த நிலைமை தலைகீழாக இருந்தது. அப்போது விற்பனை விலையைவிட மற்ற அனைத்தும் அதற்கு முந்திய, காலாண்டைவிட கூடியிருந்தன.