சட்டவிரோதமாக மலேசிய வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றவருக்குச் சிறை

சட்டவிரோதமாக மலேசிய வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றவருக்குச் சிறை

1 mins read
525f6a0d-54a6-4c33-922f-5e6712ac8f20
-

இரண்டு கார்களுக்கு உரிமையாளராகி, அவற்றை ஓட்டுவதற்கு ஆசைப்பட்ட சிங்கப்பூரர் ஒருவர் சட்டவிரோத வழிகளைக் கையாண்டார். அவரது பிஎம்டபிள்யூ, சுசிக்கி சுவிஃப்ட் ஸ்போர்ட் ரக கார்கள் நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் உட்பட அமைப்புகள், அந்த கார்கள் பொய்யான பதிவு எண்களைக் கொண்டிருந்த தையும் அந்த கார்கள் சிங்கப்பூர் பதிவிலிருந்து அகற்றப் பட்டு மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள் என்றும் அறிந்துகொண்டன.

அந்த கார்களின் உரிமையாளரான ஸாங் வெய்டா என்ற சிங்கப்பூரருக்கு மலேசியாவின் வாகனமோட்டும் உரிமம் இருந்ததும் தெரிய வந்தது. அதையும் அவர் மலேசி யாவில் உள்ள தரகர் மூலம் மலேசிய சாலைப் போக்கு வரத்துத் துறை அதிகாரி ஒருவருக்கு 7,000 ரிங்கிட் லஞ்சம் கொடுத்து பெற்றார் என்ற தகவலும் வெளிப்பட்டது.

இந்தக் குற்றங்களைப் புரிந்த 35 வயது ஸாங்குக்கு ஏழு மாதம் 22 வாரங்கள் சிறை, $7,300 அபராதம் ஆகியவற் றுடன் மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து வகுப்பு வாகனங் களையும் ஓட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சிங்கப்பூருக்குள் ஓட்டிவர அனுமதி கிடையாது.