புகைமூட்டப் பிரச்சினையைச் சமாளிக்க தயார்நிலையில் அரசாங்க அமைப்புகள்

புகைமூட்டப் பிரச்சினையைச் சமாளிக்க தயார்நிலையில் அரசாங்க அமைப்புகள்

2 mins read
dba2c290-08d8-4b36-b628-d4db0debc06e
எஸ்டி படம்: அல்போன்சஸ் செர்ன் -

புகைமூட்டப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எதிர்கொள்ள அரசாங்க அமைப்புகள் தயாராக இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இருபத்து எட்டு அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கும் அரசாங்க புகைமூட்ட தடுப்புப் பணிக்குழுவை வாரியம் வழிநடத்துகிறது. புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த இப்பணிக்குழு தயார்நிலையில் இருப்பதாக வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

புகைமூட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து, அதற்கேற்ற பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை இப்பணிக்குழுவில் இடம்பெறும் அரசாங்க அமைப்புகள் வைத்திருக்கின்றன.

பொதுமக்களின், குறிப்பாக மூத்தோர், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நுரையீரல் அல்லது இதய நோய் உடையவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த அமைப்புகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக வாரியம் கூறியது.

காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (பிஎஸ்ஐ) அளவு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகும். பிஎஸ்ஐ இந்த நிலையை எட்டினால் வெளிப்புற நடவடிக்கைகளைப் பொதுமக்கள் குறைத்துக்கொள்ளுமாறு வாரியம் அறிவுறுத்துகிறது.

1994ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தப் பணிக்குழு, வறண்ட வானிலை மற்றும் புகைமூட்ட நிலவரம் குறித்து கலந்தாலோசிப்பதுடன் அதன் திட்டங்களைப் புதுப்பித்துக்கொள்ள ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் கூடுகிறது.

"இந்தப் பணிக்குழு நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும். புகைமூட்டம் மோசமடைந்தால் இப்பணிக்குழுவில் இடம்பெறும் அரசாங்க அமைப்புகள் கூடுதல் அறிவுரையை வழங்கும்.

புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள் உள்ளிட்ட சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களுக்குச் சுகாதார அமைச்சு நினைவுபடுத்தியது. காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவி, விசிறி, குளிரூட்டும் சாதனம் உள்ளிட்டவற்றின் பயன்பாடு இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

கடைகளில் N95 ரக முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதை உறுதிசெய்ய வாரியமும் சுகாதார அமைச்சும் கூடுதலான எண்ணிக்கையில் அவற்றைக் கடைகளுக்கு விநியோகம் செய்தன.

காற்றுத் தரத்தைக் கண்காணிக்குமாறும் சுகாதார ஆலோசனைக்கு உட்பட்டு நடக்குமாறும் பாலர் பள்ளிகளுக்கு ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்படும் பாலர் பள்ளிகளிலும் காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உடலை வருத்தக்கூடிய நீண்டநேர பணிகளைக் குறைத்துக்கொள்ளுமாறு முதலாளிகளை மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

காற்-றின் தரத்-தைப் பொறுத்து, சிங்-கப்-பூர் ஆயு-தப் படை-யும் உள்-துறை அமைச்-சின் கீழ் செயல்-படும் உள்-து-றைக் குழுக்-களும் அவற்-றின் வெளிப்-பு-றப் பயிற்-சி-களை மாற்றி அமைத்-துக்-கொள்-வ-தாக வாரி-யம் சொன்-னது.