தானா மேரா படகு முனையத்தில் கொலை: புல் வெட்டியால் மாதை தாக்கிக் கொன்று நகைகளைத் திருடிச் சென்ற மலேசியர்

திருமணத்திற்கு இரு வாரங்களே உள்ள நிலையில், கையில் சேமிப்பு இல்லை. இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான துப்புரவுப் பணியாளர், தானா மேரா படகு முனையத்தில் புல் வெட்டும் கத்திரிக்கோலைக் கொண்டு அவரது மேற்பார்வையாளரைக் கொடூரமாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகளைத் திருடிவிட்டு மலேசியாவுக்குத் தப்பித்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் நிகழ்வுகளை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் முகம்மது ஃபைசல் முகம்மது அப்துல் கதிர் நேற்று நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

கணவரை இழந்து வாழும் 54 வயது மய்முனா அவாங்கை அன்றைய தினம் தாக்கிக் கொன்றதாக மலேசியரான 26 வயது அகமது முயின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திருவாட்டி மய்முனாவைக் கொன்று, அவரது நகைகளைப் பறித்துவிட்டு அவரது உடலை அருகிலிருந்த சாக்கடைக்குள் முயின் வீசினார். உடனே மலேசியாவுக்கு விரைந்த அவர், திட்டமிட்டபடியே திருமணம் புரிந்தார்.

திருமணச் செலவுகளுக்குப் பணம் பெற, திருவாட்டி மய்முனாவின் நகைகளில் சிலவற்றை விற்று, மற்ற சில நகைகளை முயின் அடகு வைத்தார்.

திருவாட்டி மய்முனாவின் மேற்பார்வையின்கீழ் தானா மேரா படகு முனையத்தில் துப்புரவாளராக முயின் பணிபுரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமது மேற்பார்வையின்கீழ் பணிபுரிந்த நான்கு பணியாளர்களுடன் திருவாட்டி மய்முனா நல்ல உறவைக் கொண்டிருந்தார். பணியாளர்களுக்குக் கடன் வழங்கியதோடு அவர்களுக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார். அந்த வகையில் முயினுக்கு கடன் வழங்கியதுடன், அவருக்கு வேறெங்கும் தங்கும் வசதி இல்லாததால் அவர் மீது இரக்கப்பட்டு இரவு நேரத்தில் படகு முனையத்தில் உள்ள பொருள் அடுக்கி வைக்கும் அறையில் முயின் படுத்து உறங்க திருவாட்டி மய்முனா அனுமதியளித்தார்.

இத்தகைய உதவியைப் பெற்றும் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக திருவாட்டி மய்முனாவை முயின் கொன்றுவிட்டார் என்று வழக்கறிஞர் ஃபைசல் நீதிமன்றத்தில் கூறினார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மலேசிய போலிசாரால் முயின் பிடிபட்டார். அடுத்த நாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் போலிசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அதேநாள் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட முயின், இங்கு கைது செய்யப்பட்டார்.

மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முயினுக்கு மனநலப் பாதிப்பு எதுவும் இல்லை என்று மனநலக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

இந்த வழக்–கில் முயின் தரப்–பில் இரு தற்–காப்பு வழக்–க–றி–ஞர்–கள் வாதி–டு–கின்–ற–னர். வழக்கு விசா–ரணை இம்–மா–தம் 25ஆம் தேதி தொட–ரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!