சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் ஸிக்கா தொற்று: ஆயத்த நிலையில் குடியிருப்பாளர்கள்

சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் ஸிக்கா கிருமியால் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதை தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. ஹெம்ஸ்லி அவென்யூவில் அவர்களுக்கு ஸிக்கா கிருமி தொற்றியது.

இந்நிலையில், ஸிக்கா கிருமித் தொற்று பகுதியாக சிராங்கூன் கார்டன்ஸ் அடையாளம் காணப்பட்டிருப்பது தங்களுக்கு கவலை அளித்தாலும் அதற்கு முன்னதாகவே தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஸிக்கா கிருமித் தொற்று பகுதி மீண்டும் உருவெடுத்திருப்பது தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கிருமித் தொற்று நிபுணர்கள் கருத்துரைத்தனர். இங்கு பரவலான கிருமித் தொற்று ஏற்படுவது அவ்வளவாக சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர்.

கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஸிக்கா கிருமித் தொற்று பகுதியாக சிராங்கூன் கார்டன்ஸ் அடையாளம் காணப்பட்டது. இவ்வாண்டு ஸிக்கா கிருமியால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் உள்ள பிரிட்போர்ட் அவென்யூ, காவ்டிரே அவென்யூ, ஹடிங்டன் அவென்யூ, போர்ட்செஸ்டர் அவென்யூ, டெவிஸ்டோக் அவென்யூ ஆகிய வட்டாரங்களில் எட்டுப் பேருக்கு டெங்கி தொற்றிருப்பதாகக் கடந்த மாதம் தெரியவந்தது. அந்த டெங்கி தொற்று இடங்களுக்கு அருகே இப்போது ஸிக்கா கிருமித் தொற்று இடம் அமைந்துள்ளது. அந்த வட்டாரங்களில் தரைவீடுகளே அதிகம் உள்ளன.

ஸிக்கா கிருமியும் டெங்கியும் ‘ஏடிஸ்’ கொசுவால் பரவுகின்றன. ஒன்றோடு ஒன்று 150 மீட்டர் தூர தொலைவில் உள்ள இடத்தில் இரு வார காலகட்டத்தில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பேர் பாதிப்படையும்போது கிருமித் தொற்றும் இடமாக அது அடையாளம் காணப்படுகிறது.

இதற்கிடையே, ஸிக்கா கிருமித் தொற்று குறித்து கடந்த வாரயிறுதியில் தேசிய சுற்றுப்புற வாரியத்தைத் தாம் தொடர்புகொண்டதாக அல்ஜூனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டதைத் தாம் பார்வையிட்டதாக அவர் சொன்னார்.

வாரியத்தின் முயற்சிகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கொசு இனப்பெருக்கத்திற்கு வகைசெய்யும் சூழல் வீடுகளில் நிலவுகிறதா என்பதைப் பரிசோதனையிடுவது, கொசுகளை அழிக்க பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பது உள்ளிட்டவை வாரியத்தின் முயற்சிகளில் அடங்கும்.

டெங்கி மரணங்கள் அதிகரிப்பு

இந்நிலையில், இம்மாதம் 7ஆம் தேதி நிலவரப்படி, டெங்கி பாதிப்பால் கூடுதலாக அறுவர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.

அந்த அறுவரையும் சேர்த்தால், இவ்வாண்டு டெங்கியால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை பத்து ஆண்டு காலகட்டத்தில் ஆக அதிகம்.

எனினும், இவ்வாண்டு ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் (ஜூலை 7 முதல் 13 வரை) 664ஆக உச்சத்தை எட்டிய டெங்கி சம்பவங்கள், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த சனிக்–கி–ழமை முடி–வ–டைந்த வார நில–வ–ரப்–படி மொத்–தம் 323 சம்–ப–வங்–கள் பதி–வா–கி–யி–ருந்–தன.

இம்–மா–தம் 16ஆம் தேதி நில–வ–ரப்–படி, டெங்கி தொற்று பர–வும் 88 இடங்–கள் அடை–யா–ளம் காணப்–பட்–டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!