பயிற்சி ஓட்டுநர் காருடன் விபத்து; மோட்டார்சைக்கிளோட்டி காயம்

பயிற்சி ஓட்டுநர் காருடன் விபத்து; மோட்டார்சைக்கிளோட்டி காயம்

1 mins read

உட்லண்ட்ஸ் அவென்யூ 4, உட்லண்ட்ஸ் அவென்யூ 9 சாலைச் சந்திப்பில் நேற்று முன்தினம் 'L' பட்டை பொருத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகின. இதில் காயமடைந்த 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, ஓட்டுநர் பயிற்சி வழங்கும் மேற்பார்வையாளர் முன்னிலையில் 'L' பட்டை பொருத்தப்பட்டிருந்த காரை ஓட்டி வாகன ஓட்டுநர்கள் பயிற்சி பெறுவர்.

விபத்தில் சிக்கிய கறுப்பு நிற மோட்டார்சைக்கிள் அதன் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தது. கறுப்பு நிற காரின் ஒரு கதவு மோசமாக சேதமடைந்திருப்பதையும் காரின் முன், பின் கதவுகளின் கண்ணாடிகள் நொறுங்கியிருப்பதையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படங்கள் காட்டின. இந்த விபத்து குறித்து திங்கட்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்தபோது காரை ஓட்டிச் சென்றவர் குறித்த விவரங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.