சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் $1.04 பில்லியன் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில் உற்பத்தி இழப்பு 80%, மருத்துவ செலவு 20% ஆகும். கடுமையான ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 9.8 வேலை நாட்களை இழந்தனர். தொடர்ந்து வேலை செய்தவர்களின் வேலைத் திறன் குறைந்தது. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 7.4 நாட்கள் உற்பத்தி குறைந்தது.
30 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன் மாற்றங்களால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது 4 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை தாக்குகிறது.

