அதிபர் ஹலிமா: பெண் தலைமைத்துவமும் பாலின சமத்துவமும் சமுதாயத்திற்கு பலனளிக்கும்

அதிபர் ஹலிமா: பெண் தலைமைத்துவமும் பாலின சமத்துவமும் சமுதாயத்திற்கு பலனளிக்கும்

1 mins read
c764b7df-9813-419c-be8d-db7bee0e20bc
பொருளியலிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் நிறுவனங்களும் சமுதாயமும் பயனடைய முடியும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். -

பொருளியலிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் நிறுவனங்களும் சமுதாயமும் பயனடைய முடியும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் மாநாட்டில் நேற்று சிறப்புரை அதிபர் ஹலிமா (படம்) ஆற்றினார்.

தகுதிக்கு முன்னுரிமை, அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகிய கொள்கைகளில் சிங்கப்பூர் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அமைப்புகள் தலைமைத்துவத்தின் பன்முகத்தன்மையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது, வர்த்தக லாபம், வலுவான நிறுவன நிர்வாகம், புதிய புத்தாக்கப் பார்வை போன்றவற்றில் ஆக்ககரமான தாக்கத்திற்கு இட்டுச்சென்றுள்ளது என்றார் அவர்.

பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 100 முதன்மை நிறுவனங்களின் இயக்குநர் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த நான்காண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது என்ற அவர், தொழில்முனைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் பெண்கள் அதிகளவில் பங்கெடுக்கும் வாய்ப்புள்ளது எனக் கூறினார். இத்துறைகளில் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்று பொதுவாகச் சொல்லப்படும் தவறான கருத்து மாற வேண்டும்.

உலக வங்கிக் குழுமத்தைச் சேர்ந்த அனைத்துலக நிதி நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட ஆசிய நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், இயக்குநர்களில் 30 விழுக்காட்டும் அதிமாக பெண்கள் உள்ள நிறுவனங்கள், முழுக்க ஆண் இயக்குநர்களைக் கொண்ட நிறுவனங்களைவிட சிறப்பாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது என்றார் திருவாட்டி ஹலிமா.