போக்குவரத்து பற்றுச்சீட்டுக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாத, தகுதிபெறும் குடும்பங்கள் தங்களது வட்டாரத்திலுள்ள சமூக நிலையங்களில் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
மாதத்திற்கு $1,900 அல்லது அதைவிடக் குறைவான வருமானமுள்ள குடும்பங்கள், அல்லது குடும்பத்தின் தனிநபர் சராசரி மாத வருமானம் $650க்கு மேற்போகாத குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெறும்.
வசதிகுறைந்த குடும்பங்கள் போக்குவரத்து செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், 2018ல் அறிவிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டால் சுமார் 192,000 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. இந்தக் குடும்பங்களுக்கு $5.8 மில்லியனுக்கு மேல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு 300,000 குடும்பங்களுக்காக $9 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிக குடும்பங்கள் இன்னும் பற்றுச்சீட்டுக்கு விண்ணபிக்கவில்லை.
கூடுதல் உதவி தேவைப்படும் குடும்பங்கள், சமூக மன்றங்களின் வாயிலாகக் கூடுதல் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தலா $30 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை 2020 மார்ச் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்திவிடவேண்டும்.

